Tuesday 9 January 2018

பழைய சாதம் அல்ல - நோய்கள் விரட்டும் அமிர்தம்



வீட்டில் இரவு நேரத்தில் சாதம் மீந்து விட்டால் தண்ணீர் விட்டு வைப்பார்கள், காலையில் அந்த பழைய சோற்றை அப்படியே நீராகாரமாக குடிப்பார்கள் அல்லது நீரை வடித்து விட்டு தயிர் அல்லது மோருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு. தொட்டு கொள்ள சிறிது வெங்காயம் பச்சை மிளகாய் போதும் கும்பா நிறைய பழைய சாதம் இருந்தாலும் சில நிமிடங்களில் மாயமாகி விடும். 

சிறு வயதில் பழைய சாதம் சாப்பிட்டு வளர்ந்த பலர் இன்று நகரங்களில் பீஸ்ஸாவும், பர்கரும்  சாப்பிடுவது தான் நாகரிகம் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை பழைய சாதத்தின் மகிமையை உலகம் அறிய செய்துள்ளது:  இரவில் சாதாரண சாதமாக (நூறு கிராம்) இருக்கும் போது 3.4 மில்லிகிராம் ஆக இருக்கும் இருக்கும் இரும்புச்சத்து ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தண்ணீரில் ஊறிய பின் காலையில்  73.91 மில்லிகிராம் ஆக மாறி விடுகிறது. (கிட்டத்தட்ட 2000 மடங்கு அதிகமாகிறது) அத்துடன் பொட்டாசியமும், எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியமும், கோடிக்கணக்கான உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது. மற்ற உணவுகளில் அதிகம் கிடைக்காத அரிதான வைட்டமின்களான வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற வைட்டமின் சத்துக்களும் கிடைக்கிறது.     


*  உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
*  ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க செய்து ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
*  உடல் சோர்வை போக்கி ஒரு நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சத்தை உடலுக்கு அளிக்கிறது.
*  உடலில் உள்ள செல்களில் அணுச் சிதைவுகள் ஏற்படுவதை தடுத்து, இதன் மூலம் விரைந்து மூப்படைவதை தடுத்து இளமையுடன் வைக்கிறது.
*  உடல் சூட்டை தணித்து இயல்பான நிலையில் வைக்கிறது.
*  வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை வெளியேற்றுவதுடன், செரிமான பிரச்சினைகளை தடுத்து வயிற்றில் வரும் அல்சர் போன்ற குடல் நோய்களை தடுக்கிறது.
*  உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகமான மன நிலையைத் தருகிறது.
*  உடலில் ஏற்படும் அலர்ஜி உட்பட பல விதமான தோல் நோய்கள் வருவதை தடுக்கிறது.

இவ்வளவு நன்மைகள் தரும் நம் பாரம்பரிய உணவாக விளங்கும் பழைய சாதத்தை நம் நாட்டிலேயே பலர் ஏழைகளின் உணவு என்றும், சிலர் பழைய சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்றும் ஒதுக்கி விடுகின்றனர், இனிமேலாவது வயிற்றை கெடுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து விட்டு பழைய சாதத்தின் பக்கம் பார்வையை திருப்பினால் உடல்நலமும் சீராகும், நோய்களால் வரும் மருத்துவ செலவுகளும் இருக்காது. 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர