Sunday 31 December 2017

ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிறந்த வரலாறு

ஷ்ய நாட்டில் ஒரு காலத்தில் மார்ச் முதல் தேதி புது வருட பிறப்பு நாளாக கொண்டாடப்பட்டு வந்தது பின்பு செப்டம்பர் முதல் தேதி புது வருட பிறப்பு நாளாக கொண்டாடப்பட்டது, 1699ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களால் ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டது, அன்று முதல் தொடர்ந்து முன்னூறு வருடங்களாக மிக பிரபலமான ஒரு விடுமுறை கொண்டாட்ட தினமாக ஜனவரி ஒன்றாம் தேதி இருந்து வந்தது ஆனால் 1927 ஆம் ஆண்டு  மதரீதியான கொண்டாட்டங்களுக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்ட தடையால் கிறிஸ்துமஸ் பண்டிகையோடு சேர்த்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தது. 1935ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இரண்டாம் உலக போர் நடந்து வந்த காலத்திலும் கூட ரஷ்ய மக்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாட மறக்கவில்லை. 


1957 ஆம் ஆண்டு, டிசம்பர் 23ஆம் தேதி  இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பிய பின் ஜனவரி ஒன்றாம் தேதியை புத்தாண்டு விடுமுறை தினமாக அதிகாரபூர்வமாக ரஷ்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து இந்நாள் வரை ஜனவரி ஒன்றாம் தேதி ரஷ்யாவில்  புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்