Wednesday 31 January 2018

உலக வரலாற்றில் சில முதல் நிகழ்வுகள் - கண்டுபிடிப்புகள்

லக வரலாற்றில் முதல் கண்டுபிடிப்புகள், முதல் முறையாக நடந்த சில நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு கண்ணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் கோல்டன்  டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கோல்டன் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Wednesday 24 January 2018

நாட்பட்ட ஆஸ்துமாவை குணமாக்கும் குளியல் முறை



கீழே நான் கொடுத்திருக்கும் பதிவு டாக்டர் சக்தி ரஞ்சன் என்பவர் கொடுத்திருப்பது, இந்த பதிவை ஒரு நண்பர் படித்து விட்டு வாட்ஸ் ஆப் மூலம் பகிர, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ பேருக்கு இது உதவும் என நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன், டாக்டர் சக்தி ரஞ்சன் அவர்களின் பதிவு: 

பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .

அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. .52 வயது ஆண்.அவருக்கு ...என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம் விசாரித்தேன். பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று. அதற்கு அவர். அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார். இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். . அவரோ... "உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள். கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.

அதாவது ..  .அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..

1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.
2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி.
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு  உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு, ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும். இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு. 

பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது. ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். பழகப்பழக எளிமையாக பழக்கப்படும். இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது. நானும் நம்பிக்கையுடனும்,  வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்  தொடங்கினேன்.. ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது. சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது. தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை. எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன். தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக  வெளியே விட்டேன். ஆச்சரியம்  குளிக்கும் போது  மூக்கு வழி சுவாசம் எளிமையானது.. கடந்த ஆறு மாதமாக இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்.. தற்போது  எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை . இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது. இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது.. 

எனது புரிதல். .

நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன். நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் .. சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற  உண்மையை  உணர்த்த உதவுகிறது பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. சுருங்கும் அல்லது எதிர்வினை  தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ... தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது. 

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது. சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது.. ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.

நன்றி: வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழு
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Monday 15 January 2018

மறைந்த ஞானி, மறையாத ஞானம்


மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், தொலைக்காட்சி விவாதங்களில் எதை குறித்தும் கவலைப்படாமல், யாருக்கும் அஞ்சாமல் தன் கருத்துக்களை முன் வைத்து பேசிய சிந்தனையாளர் என்று பல துறைகளில் தன்  பங்களிப்பை கொடுத்து வந்த பன்முகத்தன்மை கொண்ட ஞானியின் மறைவு தமிழ் சமுதாயத்துக்கு ஓர் பேரிழப்பு ஆகும்.  அறுபத்தி மூன்று வயது வரை வெகுஜன பத்திரிக்கைகளில் தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சியிலும், மேடைகளிலும் தன் பேச்சாலும் தமிழ் மக்கள் உள்ளங்களில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார், அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்களும், ஆற்றிய சிந்தனையை தூண்டும் எழுச்சி உரைகளும் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருக்கும். 

ஒரு விழா மேடையில் ஞானி அவர்களின்   சிந்தனையை தூண்டும் உரை

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Tuesday 9 January 2018

பழைய சாதம் அல்ல - நோய்கள் விரட்டும் அமிர்தம்



வீட்டில் இரவு நேரத்தில் சாதம் மீந்து விட்டால் தண்ணீர் விட்டு வைப்பார்கள், காலையில் அந்த பழைய சோற்றை அப்படியே நீராகாரமாக குடிப்பார்கள் அல்லது நீரை வடித்து விட்டு தயிர் அல்லது மோருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு. தொட்டு கொள்ள சிறிது வெங்காயம் பச்சை மிளகாய் போதும் கும்பா நிறைய பழைய சாதம் இருந்தாலும் சில நிமிடங்களில் மாயமாகி விடும். 

சிறு வயதில் பழைய சாதம் சாப்பிட்டு வளர்ந்த பலர் இன்று நகரங்களில் பீஸ்ஸாவும், பர்கரும்  சாப்பிடுவது தான் நாகரிகம் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை பழைய சாதத்தின் மகிமையை உலகம் அறிய செய்துள்ளது:  இரவில் சாதாரண சாதமாக (நூறு கிராம்) இருக்கும் போது 3.4 மில்லிகிராம் ஆக இருக்கும் இருக்கும் இரும்புச்சத்து ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தண்ணீரில் ஊறிய பின் காலையில்  73.91 மில்லிகிராம் ஆக மாறி விடுகிறது. (கிட்டத்தட்ட 2000 மடங்கு அதிகமாகிறது) அத்துடன் பொட்டாசியமும், எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியமும், கோடிக்கணக்கான உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது. மற்ற உணவுகளில் அதிகம் கிடைக்காத அரிதான வைட்டமின்களான வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற வைட்டமின் சத்துக்களும் கிடைக்கிறது.     


*  உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
*  ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க செய்து ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
*  உடல் சோர்வை போக்கி ஒரு நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சத்தை உடலுக்கு அளிக்கிறது.
*  உடலில் உள்ள செல்களில் அணுச் சிதைவுகள் ஏற்படுவதை தடுத்து, இதன் மூலம் விரைந்து மூப்படைவதை தடுத்து இளமையுடன் வைக்கிறது.
*  உடல் சூட்டை தணித்து இயல்பான நிலையில் வைக்கிறது.
*  வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை வெளியேற்றுவதுடன், செரிமான பிரச்சினைகளை தடுத்து வயிற்றில் வரும் அல்சர் போன்ற குடல் நோய்களை தடுக்கிறது.
*  உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகமான மன நிலையைத் தருகிறது.
*  உடலில் ஏற்படும் அலர்ஜி உட்பட பல விதமான தோல் நோய்கள் வருவதை தடுக்கிறது.

இவ்வளவு நன்மைகள் தரும் நம் பாரம்பரிய உணவாக விளங்கும் பழைய சாதத்தை நம் நாட்டிலேயே பலர் ஏழைகளின் உணவு என்றும், சிலர் பழைய சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்றும் ஒதுக்கி விடுகின்றனர், இனிமேலாவது வயிற்றை கெடுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து விட்டு பழைய சாதத்தின் பக்கம் பார்வையை திருப்பினால் உடல்நலமும் சீராகும், நோய்களால் வரும் மருத்துவ செலவுகளும் இருக்காது. 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர